சபாபதி இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் குக்வித் கோமாளி புகழும் நடிக்கிறார். சந்தானம் மற்றும் புகழ் நடிப்பதால் இந்த படம் காமெடி படமாகவே  அமையும்.மேலும் இந்த படத்தில் பாஸ்கர்,பீர்த்தி வர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இவர்கள் நடித்து வரும் படங்கள் அனைத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல், இந்த படமும் நல்ல வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெடி கதாபாத்திரமான இந்த படம் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.