மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக அக்டோபர் 1, 1928 ஆம் ஆண்டு பிறந்தார். சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.


சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. 

சிவாஜி கணேசன் அவர்களின் பேரனான நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூகுள் டூடுல் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தில் அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது. இந்த சித்திரப்படத்தை உருவாக்கிய கூகுள் இந்தியா மற்றும் சிறப்பு கலைஞர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி ஆகியோரின் பணி பாராட்டத்தக்கது. மேலும் ஒரு பெருமைக்குரிய நிகழ்வு என்று ட்வீட் செய்த்துள்ளார்.


செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூசன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். நடிகர்திலகம் என அழைக்கப்படும் அவர் தான் நடித்து 1952-இல் வெளியான முதல் படமான பராசக்தியின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். எந்த படம் நடித்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். 1961-ஆம் ஆண்டு வெளியான பாசமலர் படத்தில் அனைவரையும் அழ வைத்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உருக்கமாக நடித்திருப்பார். காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர்.