பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மகான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே.

 இந்த படத்தின் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கேரக்டரின் புதிய போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாமி 2 போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து விக்ரமும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மிகப் பெரிய வெற்றிப் படமான ரஜினிகாந்த் நடித்த பேட்டை தொடர்ந்து இந்த படமும் மிக பெரிய வெற்றியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.